போரியாங் மண் திருவிழா
போரியாங் மண் திருவிழா | |
---|---|
வகை | திருவிழா |
நாட்கள் | யூலை |
காலப்பகுதி | ஆண்டுதோறும் |
அமைவிடம்(கள்) | போரியாங், தென் கொரியா |
ஆள்கூறுகள் | 36°18′14″N 126°31′01″E / 36.304°N 126.517°E |
துவக்கம் | 1998 |
போரியாங் மண் திருவிழா (Boryeong Mud Festival) என்பது தென் கொரியாவின் சியோலுக்குத் தெற்கே 200 கிமீ தொலைவில் உள்ள போரியோங்கில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா ஆகும். முதல் மண் திருவிழா 1998 இல் நடத்தப்பட்டது, 2007 வாக்கில், திருவிழாவுக்கு 2.2 மில்லியன் பார்வையாளர்கள் வந்தனர்.[1]
போரியோங்கில் மண் எடுக்கப்பட்டு, டேச்சியோன் கடற்கரை பகுதிக்கு சுமையுந்துகளில் கொண்டு செய்யப்படுகிறது. அங்கு குளம் போன்ற வட்ட வடிவித் தொட்டிகளில் கலந்து சேற்றுக் குளியலுக்குப் பயன்படுத்தபடுகிறது.[2] அந்த மண்ணில் உடலுக்கு நன்மை தரும் உலோகத் தாதுக்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. பல அழகுசாதனப் பொருட்களை தயாரிக்க அந்த மண் முக்கியப் இடத்தை வகிக்கிறது. இந்த திருவிழா முதலில் போரியோங் மண் அழகுசாதனப் பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் முறையாக கருதப்பட்டது.[3]
இந்த விழா சுமார் இரண்டு வார காலம் நடைபெறுகிறது என்றாலும், அதன் இறுதி வாரக் கடைசியானது கொரியாவின் மேற்கத்திய மக்களிடையே பிரபலமானது. திருவிழாவின் இறுதி வார நிகழ்வு பொதுவாக யூலை இரண்டாவது வார இறுதியில் நடக்கும்.
வரலாறு
[தொகு]1997 ஆம் ஆண்டில் போரியோங் மண் அடுக்குகளின் சேற்றைப் பயன்படுத்தி பலவிதமான அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. இந்த மண்ணில் தாதுக்கள், பெண்ட்டோனைட்டுகள், ஜெர்மானியங்கள் நிறைந்ததாகக் கூறப்பட்டது, இவை அனைத்தும் இயற்கையாகவே இப்பகுதியில் சேற்றில் காணப்படுகின்றன.
இந்த அழகுசாதனப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், போரியோங் மண் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருவிழாவின் மூலம், மக்கள் சேறு மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பற்றி மேலும் அறிந்து கொள்வார்கள் என்று நம்பப்பட்டது.
ஈர்ப்புகள்
[தொகு]திருவிழாவுக்காக போரியங் கடற்கரையில் பல இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யபடுகின்றன. மண் குளம், மண் சரிவுகள், மண் சறுக்கு அலை சறுக்கு, சறுக்கு விளையாட்டு, கயிற்றைப் பிடித்துக் கொண்டு குழியில் விழாமல் கடக்கும் போட்டிகள் போன்றவை ஏற்பாடு செய்யபடுகின்றன. இதில் கலந்து கொள்ள கட்டணம் வசூலிக்கபடுகிறது. கட்டணத்தை இணைவழியிலும் அல்லது அந்த இடத்திலும் செலுத்தலாம்.[4] உடலில் ஓவியம் வரைவதற்காக வண்ண சேறும் தயாரிக்கப்படுகிறது. கடற்கரையில் ஒரு பெரிய மேடை அமைக்கப்படுகிறது. அதில் இசை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் பல்வேறு காட்சி ஈர்ப்புகளும் பயன்படுத்தப்படுகிறது.
போரியோங்கிலிருந்து கொண்டுவரப்படும் சேற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களை விற்கும் ஒரு சிறிய சந்தை கடற்கரையில் இயங்குகிறது. அங்கு பல்வேறு உடல்நல மற்றும் அழகு சிகிச்சை மையங்கள் உடற்பிடிப்பு, குத்தூசி மருத்துவம், சேற்று மருத்துவ குணங்களைப் பயன்படுத்தி மற்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.பெரிய வாணவேடிகையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jiwatram, Jaya (2006-06-19). "Good Clean Fun". Time magazine. Archived from the original on February 13, 2007.
- ↑ Card, James (2004-07-23). "Down and dirty at Boryeong Mud Festival". Korea Herald. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-22095253_ITM.
- ↑ Kumar, Meenakshi (2007-04-28). "Now, get a feel of space in Malaysia". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024074819/http://articles.timesofindia.indiatimes.com/2007-04-28/rest-of-world/27876791_1_astronaut-training-tourism-malaysia-space-shuttle.
- ↑ "머드에 빠져라, 뒹굴어라, 즐겨라!". 오토타임즈. 2010-07-16. http://autotimes.hankyung.com/apps/news.sub_view?popup=0&nid=81&c1=&c2=&c3=&nkey=83013.